» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 11:26:00 AM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ், கழிவுநீர்க் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சடலம் சாக்கடைக்குள் சிக்கியிருந்ததால், அதனை மீட்க தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை வெளியே எடுத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜீவ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்த செல்வம் (45) என்பது தெரியவந்தது.
இவர் எப்.சி.ஐ குடோனில் மூடை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்த பிறகு, செல்வம் பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதை அதிகமாகி நிலைதடுமாறிய அவர், எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : ஜூன் 1-ல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 9:04:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST)

தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST)

100% வாக்குப்பதிவு: உப்பளத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் விஷு மகாஜன் விழிப்புணர்வு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:14:57 PM (IST)







