» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற 7பேர் காயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 12:49:40 PM (IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற தொண்டர்களின் வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் இன்று நடைபெறும் பிரம்மாண்டத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தவெக தலைவர் விஜய் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் அவருக்குத் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக அவர் தனது பிரச்சார வாகனத்தில் நெல்லை நோக்கிப் புறப்பட்டார்.
தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் வாகனங்களில் பின்தொடரக் கூடாது என அக்கட்சியின் தலைமை முன்னதாகவே கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இருப்பினும், அந்த அறிவுறுத்தலையும் மீறி உற்சாக மிகுதியால் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், 7 இளைஞர்கள் காயமடைந்தனர். விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







