» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : தவெக நிர்வாகிகள் - தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 8, ஏப்ரல் 2026 12:29:51 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த தவெக தலைவர் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரச் சூறாவளிப் பயண மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கன்னியாகுமரி முன்னாள் எம்.எல்.ஏ முத்துகிருஷ்ணன், வேட்பாளர்கள் ஸ்ரீகாந்த் (தூத்துக்குடி), ஜே.கே.ஆர். முருகன் (திருச்செந்தூர்), பாலா (கோவில்பட்டி), ராஜ் பிரகாஷ் (தென்காசி) மற்றும் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சுமுத்ரா முருகன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்ததும், விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கண்ட விஜய், தனது பரப்புரை வாகனத்தில் ஏறி நின்று, கைகளை அசைத்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என அவர் நலம் விசாரித்தபோது, தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், திருச்செந்தூர் செயலாளர் பிரைட்டர், மாவட்டப் பொருளாளர் அருண்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் கௌதம், மாவட்ட இணைச் செயலாளர் கோல்டன், கிஷோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்துத் தலைவரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அவர் சாலை மார்க்கமாகத் திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : ஜூன் 1-ல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 9:04:48 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:12:24 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:57:55 PM (IST)

தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 3:25:18 PM (IST)

100% வாக்குப்பதிவு: உப்பளத் தொழிலாளர்களிடம் ஆட்சியர் விஷு மகாஜன் விழிப்புணர்வு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:14:57 PM (IST)







