» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்கண்டேயன், வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளான மதிமுக மாவட்டச் செயலாளர் ரமேஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் சுரேஷ் மற்றும் விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளின் ஒன்றியச் செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இமானுவேல், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பேரூராட்சித் தலைவர்கள், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ராமஜெயம், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடியில் ஏசாதுரை மனுத்தாக்கல்:
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் ஏசாதுரை, தேர்தல் அலுவலர் பிரபுவிடம் மனுத்தாக்கல் செய்தார்.
முன்னதாக, தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த இவர், தனது அலுவலகத்தில் இருந்து ஏராளமான தொண்டர்களுடன் பிரதான சாலை வழியாக ஊர்வலமாக வந்து தேர்தல் அலுவலகத்தை அடைந்தார். மனுத்தாக்கலின் போது பாமக மத்திய மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, தொழிலதிபர் ராதா கிருஷ்ணபாண்டியன் மற்றும் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)







