» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தத் தேர்தல் விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல். அதிமுகவில் இருந்து கொண்டு ஆட்சிப் பலனையும், அதிகாரப் பலனையும் அனுபவித்துவிட்டு, கட்சிக்குத் துரோகம் இழைத்து தற்போது திமுகவில் இணைந்துள்ள தற்போதைய எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை மக்கள் வீழ்த்த வேண்டும்.

திமுகவில் இன்று உள்ள பல பேர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தான். அக்கட்சியில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களை விட, அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், சீட்டும் வழங்கப்படுகிறது கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதால் மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்."

இந்த நிகழ்வில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்: சின்னப்பன், என்.கே. பெருமாள், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மகேஷ், ராமச்சந்திரன், பால்ராஜ்; நகரச் செயலாளர் மாரிமுத்து; தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆனந்த், சுரேஷ்; சண்முகசாமி, ஆசைத்தம்பி, மகளிர் அணி: சாந்தி, பிரியா, பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory