» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)



கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்குப் பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி குழு உறுப்பினர் செல்வம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரிச் செயலாளர் சுமீ கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பானதொரு உரையை ஆற்றினார்.

மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளை எஸ்.எஸ்.டி.எம். கல்லூரிப் பேராசிரியர் செல்வலட்சுமி மற்றும் உதவிப் பேராசிரியர் சுருதி ஆகியோர் வழங்கினர். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கப்பட்டது.

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையான பாடப்பிரிவுகள் உகந்ததாக இருக்கும் என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் அவர்கள் விளக்கிக் கூறினர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பேராசிரியர்கள் உரிய விளக்கங்களை அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் இந்துமதி, செல்வவிமலா, சீனித்தாய், ராஜா, மாரிச்சாமி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் உமாராணி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory