» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் பாய்ந்து கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை: குடும்பத் தகராறில் பரிதாபம்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:40:03 AM (IST)

மணியாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக, கடலை மிட்டாய் வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் சின்னதுரை (57). இவர் மணியாச்சி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். சின்னதுரை கடந்த சில நாட்களாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சின்னதுரை "தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற சின்னதுரை, மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் இருப்புப் பாதையில் வந்து கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory