» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3 பேரிடம் செல்போன் பறிப்பு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:29:32 AM (IST)
தூத்துக்குடியில் மூன்று இடங்களில் முதியவர்களை மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜே.சி. நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (63) என்பவர் நேற்று இரவு சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றது. அதே கும்பல், தாளமுத்து நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஜெரால்ட் அலெக்சாண்டர் (60) என்பவரிடமும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியது.
மேலும், கிருஷ்ணராஜபுரம் ரோட்டில் நடந்து சென்ற மற்றொரு நபரிடமும் அந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. பறிக்கப்பட்ட மூன்று செல்போன்களின் மொத்த மதிப்பு ரூபாய் 34,000 ஆகும். இச்சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தாளமுத்து நகர் மற்றும் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்தத் தொடர் பறிப்புச் சம்பவங்கள் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)

திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் : பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:12:14 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு: திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:40:49 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேரத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:12:07 PM (IST)







