» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை வாகன ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சக பணியாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி பேரூரணி பகுதியைச் சேர்ந்த சித்திரை செல்வம், தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இன்று காலை அவர் தனது குழுவினருடன் சேது ராஜா தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் நவீன் என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள மண்ணை அள்ளுமாறு கூறியுள்ளார்.
இதற்கு ஓட்டுநர் சித்திரை செல்வம், "உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே மண்ணை அள்ள முடியும்" என்று பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன், சித்திரை செல்வத்தைத் தகாத வார்த்தைகளால் பேசி, பிளாஸ்டிக் குழாயால் பலமாகத் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்த 20-க்கும் மேற்பட்ட தூய்மை வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களது வாகனங்களுடன் வடபாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பணியில் இருந்த அரசு ஊழியரைத் தாக்கிய நவீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் புகார் மனு அளித்தனர்.
பணியாளர்களின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட வடபாகம் காவல்துறையினர் நவீன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பான சூழலில் பணிபுரிய வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., மதன் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 8:37:27 PM (IST)

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)










BabuFeb 14, 2026 - 08:33:07 AM | Posted IP 162.1*****