» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை பிரிந்த மன வேதனையில் வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 14, பிப்ரவரி 2026 3:21:42 PM (IST)

தூத்துக்குடியில்  கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியிடம் விவாகரத்து பெற்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் புஷ்பராஜ் (40). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஆகாஷ் (12) என்ற மகனும் உள்ளனர். புஷ்பராஜிற்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

மனைவியைப் பிரிந்த பிறகு, புஷ்பராஜ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவருக்குத் தீவிர மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பராஜ் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புஷ்பராஜை மீட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory