» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை மிரட்டல் வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:34:32 PM (IST)

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு கொலை மிரட்டல் வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 2025 ஆம் ஆண்டு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேலும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி காளியப்பன் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேற்படி திருச்செந்தூர் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் போலீசார் அவரை நேற்று (02.02.2026) திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேற்படி வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் நேற்று காளியப்பன் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் போது மற்றொரு வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் இன்னோஷ்குமார் மற்றும் காவல்துறையினரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் வனிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory