» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என்று திருமண்டல நிர்வாகியும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, உயர்நீதிமன்ற வழக்கு எண்: OSA 10 to 13, 15 & 16/2026 ன் 22.01.2026  தேதியிட்ட உத்தரவின்படி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 13வது பெருமன்றக் கூட்டம், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி திங்கள்கிழமை காலை 9:30 மணியளவில் நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் வைத்து நடைபெறும். 

கூட்டத்திற்கு ஆரம்பமாக அன்று காலை 8:00 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெறும். அங்கத்தினர் அனைவரும் தவறாது பங்கு பெற அழைக்கப்படுகிறீர்கள்" என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் இத் திருமண்டல பெருமன்ற கூட்டத்தில் திருமண்டல அலுவலர்களின் தேர்தல்கள் முதலாவது நடைபெறுகிறது. இதில் உபதலைவர், குருத்துவச் செயலர், லே' செயலர் மற்றும் திருமண்டல பொருளாளர் தேர்தல் நடைபெறுகிறது. 

இதைத் தொடர்ந்து சினாடு உறுப்பினர்கள், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கும், பல்வேறு உபகமிட்டிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் போட்டியிடும் பிரதிநிதிகள் 14.02.2026 மாலை 6:00 அதற்கென்று குறிப்பிடப்பட்ட நியமன படிவத்தை நாசரேத், திருமண்டல தேர்தல் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 15.02.2026 அன்று மாலை 6:00 மணி வரை அதற்கென்று பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் 16.02.2026 அன்று  நடைபெறுகிற தேர்தல்களில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்க ளாகதேர்வு செய்யப்பட்ட 265 பேர், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பிரதிநிதிகள் சார்பில் தேர்வு செய்யப் பட்ட 51 பேர், 138 குருவான வர்கள் என மொத்தம் 454 பேர் வாக்களிக்க உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory