» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:58:51 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மகன் தடிகாரன் (20), மரம் வெட்டும் தொழிலாளி. இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தடிகாரன் மற்றும சாலையில் நடந்து சென்ற மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)