» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 2, பிப்ரவரி 2026 8:51:18 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் (62/2026) என்பவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மரிய சுரேஷ் (37) என்பவரை முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் - II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  பீரித்தா  இன்று (02.02.2026) ஜெபராஜை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சுனில், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  அருளப்பன் மற்றும் காவல்துறையினரையும், அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்  வனிதா ராணி மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோைரயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory