» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா
திங்கள் 2, பிப்ரவரி 2026 8:01:31 AM (IST)

தூத்துக்குடியில் இந்து முன்னணி மாநகர மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி சுப்பையா புரம் 1-வது தெருவில் இந்து முன்னணி மாநகர மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் நடந்தது. தொழிலதிபர்கள் எஸ். பெரியசாமிநாதன், பி.பி.எம். டி.பொன் குமரன், முன்னாள் ராணுவவீரர் நடராஜன், தொழில் அதிபர் ஈசுவரன், ஆதிநாதன், ஆழ்வார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாநில துணைத்தலைவர்கள் வி.பி.ஜெயக்குமார், அரசுராஜா ஆகியோர் இந்து முன்னணி கொடியேற்றினர்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன், மாநில பேச்சாளர் மாயக்கூத்தன், நெல்லை கோட்ட செயலாளர் பிரம்மநாயகம், நெல்லை மாவட்ட இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சங்கர், தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் நாராயணராஜ், மாவட்ட செயலாளர் சரவணக்குமார், இந்து வக்கீல் முன்னணி இசக்கிலட்சுமி, இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் சொர்ணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









