» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் கைது

திங்கள் 2, பிப்ரவரி 2026 7:59:16 AM (IST)

கயத்தாறு அருகே மதுபோதையில் பஸ்சை ஓட்டிய அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா காடல்குடி பகுதியை சேர்ந்த சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (52). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று காலையில் நெல்லை புதியபஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக விளாத்திகுளம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

அந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்துள்ளனர். நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் பஸ் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். அப்போது பஸ் டிரைவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அப்போது பஸ் கயத்தாறை அடுத்துள்ள சவலாப்பேரி அருகே சென்று கொண்டிருந்துள்ளது. சுதாரித்து கொண்டு ஒரு பயணி முன்பகுதிக்கு சென்று டிரைவரை சர்வீஸ் சாலையில் ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். அவரும் பஸ்சை அந்த சாலையில் நிறுத்தியவுடன் பயணிகள் அலறி அடித்தவாறு இறங்கியுள்ளனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதுகுறித்து பயணிகள் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ்கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் அந்த பஸ்சிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் டிரைவர் மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக பயணிகள் அனைவரையும் மாற்று பஸ்சில் அவர் அனுப்பி வைத்தார். தொடர்ந்து பஸ் டிரைவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவருக்கு அங்கு சோதனை நடத்தி மதுபோதையில் இருந்ததை உறுதி ெசய்துசான்றிதழ் பெறப்பட்டது.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர். பின்னர் அந்த பஸ் மாற்று டிரைவர் மூலம் டெப்போவுக்கு எடுத்து செல்லப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory