» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரபிக் கல்லூரியில் மவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா
திங்கள் 2, பிப்ரவரி 2026 7:41:09 AM (IST)

தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்குமவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா நடைபெற்றது
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்குமவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார். அனைவரையும் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தீன் வரவேற்று பேசினார்.
செயலாளர் அபூபக்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது, ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா, அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் அம்ஜத் அலி, முகமது இஸ்மாயில், முஹம்மது கனி, செய்யது அப்பாஸ் அலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து காயல்பட்டினம்அஸ்கரருர்ரஹ்மான் அரபிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அஹமது அப்துல் காதிர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை முன்னாள் தலைவர் மீராசா, ஆகியோர் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த அப்துல் ரகுமான், முகமது அஃபான், முகமது யூசுப், துவான் மைதீன், ஆகிய நான்கு மாணவர்களுக்குமவுலவி ஆலிம் மஸ்லஹி பட்டம் வழங்கினார். இதைத் தொடர்ந்து ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் ஷேக் முகமது உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினார். முடிவில் சையத் இப்ராகிம் பாஷா நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை முன்னாள் தலைவர் மீராசா, அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தீன், செயலாளர் அபூபக்கர்,
நிர்வாக சபை செயலாளர் முன்னாள் எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவர் முன்னாள் சாகுல் சிராஜுதீன், முன்னாள் பொருளாளர் சையது மூஸா,முஸ்லிம் சமுதாய நலச் சங்க தலைவர் ஏ.கே. மைதீன், அர் ரஹ்மானிய நற்செய்தி மன்ற தலைவர் முகங் ரஃபிக், செயலாளர் எம்.எச். மீராசா, பொருளாளர் முகமது ஜம்ஜம் மூசா, அஜிஸ், கிராமிய பள்ளிவாசல் மேலாளர் முகமது சலீம், உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









