» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக எதுவுமில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:32:35 PM (IST)

தேர்தல்கள் இருந்தும்கூட தமிழ்நாட்டுக்காக மத்திய பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை என்று மத்திய பட்ஜெட் மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "இந்த பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் 50 சதவிகித நிதிப் பகிர்வைக் கோரியபோதிலும், மீண்டும் 41 சதவிகிதம் மட்டுமே கூறியுள்ளனர். இது அனைத்து மாநிலங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், இந்த பட்ஜெட்டில் உறுதியானதாக எதுவுமில்லை.

தேர்தல்களை மனதில்கொண்டு கூட, அவர்கள் (பாஜக அரசு) தமிழ்நாட்டுக்காக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மண்ணை ஆட்கொள்ள மட்டும் அவர்கள் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகமிழைப்பதாக மத்திய பட்ஜெட்டைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களுடன் பாஜக அரசு போர் புரிவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கூறினார்.


மக்கள் கருத்து

தமிழக மக்கள்Feb 3, 2026 - 03:52:52 PM | Posted IP 162.1*****

பட்ஜெட் ஐ நல்லா படித்து பார்க்கவும், தெரிந்தவர்களிடம் விவரம் கேட்கவும். அருமையான பட்ஜெட் என்று நிறைய FINANCE SPECIALIST தெரிவிக்கிறார்கள். BULLET TRAIN சென்னையில் இருந்து BANGALORE / HYDRABAD --பட்ஜெட்ல தெளிவாக தெரிவிக்கிறார்கள். சென்னை தமிழ்நாட்டில் தான் உள்ளது.....

ஆமாFeb 2, 2026 - 11:50:37 AM | Posted IP 104.2*****

நீட் ஒளித்து வைத்து வந்த இளம் விதவை தலைவி பேச்சை பாருங்க. சாராய ஆலை அதிபர் குடும்பங்களுக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory