» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளம் புற்று மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:24:12 PM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் 24ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா காலை 6:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 8 மணிக்கு சர்ப்ப ஹோமம், 10 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாரணை நடந்தது. 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன் அறங்காவலர்கள் மகாராஜன் பால குருசாமி உள்பட திரளான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் சிவா, குரு ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









