» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூசத் திருவிழா
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:18:02 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த தைப்பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா நடந்தது.
இதையொட்டி காலை 8.30 மணிக்கு தெப்பக்குளம் முன்புள்ள ஸ்ரீ சோமாஸ்கந்தர் சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலுக்கு அருள்மிகு ஸ்ரீ சங்கரா ராமேஸ்வரர் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் எழுந்தருளி 9மணிக்கு கும்ப பூஜை, 10மணிக்கு அபிஷேகம், 11மணிக்கு தீர்த்தவாரி நடந்தது நண்பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது
பின்னர், இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள், சுந்தரபாண்டிய விநாயகர் திருக்கோவிலில் சோடச தீபாராதனை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தெப்பகுளத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இதனால் சுவாமி அம்பாள் ரதவீதி உலா தெப்பக்குளம் ரோட்டை சுற்றி வந்து கோவிலை சென்றடைந்தது.
பூஜைகளர கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் சண்முகம் ஆகியோர் நடத்தினர். விழாவில் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம் கேகேஜி குமரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









