» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை!

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 7:42:43 PM (IST)



நாலுமாவடியில்  நடந்த  தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை  தேர்வு எழுதும் மாணவ_ மாணவிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை  நடந்தது. 

இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி கொடுத்து தேர்வு எழுதும் மாணவ_ மாணவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். படிப்பிற்கான ஆலோசனை, சாதனையாளர்களின் அனுபவ சாட்சி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 

இதில்  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம்  மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory