» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆயுதங்கள் தயாரித்து விற்பனை: பட்டறை உரிமையாளர் கைது!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:18:25 PM (IST)
தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்கள் தயாரித்து விற்பனை செய்த பட்டறை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சில்வர் புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கணபதி (61), இவர் மாப்பிள்ளையூரணியில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். அந்த பட்டறையில் ஆயுதங்கள் தயாரித்து விற்பதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் இரும்பு பட்டறையில் சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு விற்பனைக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த 5 அரிவாள்கள், 3கத்திகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் கணபதியை கடந்த பல ஆண்டுகளாகவே பட்டறையில் பயங்கர ஆயுதங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









