» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : 8 பேர் கைது

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:34:27 AM (IST)



எட்டயபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்ன கருப்பசாமி (53). இவருக்கு சொந்தமான வீடு எட்டயபுரம் பாரதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ளது. இவரது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணியமர்த்தி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் உரிய அனுமதி பெறாமல் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  அங்கிருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்து வீட்டின் உரிமையாளர் சின்ன கருப்பசாமி, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சுப்பிரமணியன் (31), கதிரேசன் (27), சிவகாசியைச் சேர்ந்த சரவணன் (28), மீனம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (54), எட்டயபுரம் அருகே தலைகாட்டுபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (39), ராமனூத்தைச் சேர்ந்த அந்தோணி (70), பட்டாசு தயாரிப்பு பணியின் உரிமையாளர் சின்ன கருப்பசாமி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory