» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடு புகுந்து மிரட்டல்: பெண்ணின் சகோதரன் கைது!
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:28:06 AM (IST)
சாத்தான்குளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் வீடுபுகுந்து மிரட்டல் விடுத்த பெண்ணின் சகோதரனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பூவன்விளை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (60). இவருக்கு மனைவி, 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகள் ரட்சணி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் இருவரது குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று பெண்ணின் உடன்பிறந்த அண்ணன் கிஷோர் குமார், இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று உங்களின் மகன் எனது தங்கையை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக கூறி தகராறு செய்துள்ளார். மேலும், வீட்டின் கதவை அரிவாளால் தாக்கி சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து இசக்கிமுத்து தட்டார்மடம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கொலைமிரட்டல் விடுத்த கிஷோர் குமாரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









