» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உத்தரப் பிரதேச நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:15:19 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓரியானா பவர் லிமிடெட்டுடன், நிலைத்த எரிசக்தி முன்னெடுப்புகளில் ஒத்துழைப்பு செய்யும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஜன. 27 முதல் 30 வரை கோவாவில் நடைபெற்ற இந்தியா எரிசக்தி வாரம்-2026 நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் முன்னிலையில், நிர்வாகப் பொறியாளர் எ. செந்தில் கணேஷ், ஓரியானா பவர் லிமிடெட் சார்பாக ஜிஹெச்2 வர்த்தகத் தலைவர் ஓம்கார்நாத், இணை நிறுவனர் அனிருத் சரஸ்வத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தம் கார்பன் பிடிப்பு, பயன்பாடு, சேமிப்பு முன்னோடித் திட்டம் அமைத்தல், துறைமுகம் அல்லது துறைமுகம் தொடர்புடைய இடங்களில் பசுமை மெத்தனால் உற்பத்தி நிலையம், அதனுடன் தொடர்புடைய கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த முன்முயற்சி துறைமுகத்தின் கார்பன் நடுநிலைமை இலக்குகளை முன்னெடுக்கவும், பசுமை மெத்தனால் சேமிப்பு, வர்த்தக ஏற்றுமதிக்கான பசுமை ஹைட்ரஜன் கட்டமைப்புக்கான தயாரிப்பில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மேலும், வ.உ.சி. துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் யுனிவர்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. துறைமுகத்தில் திடக் கழிவு செயலாக்க நிலையத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதில், துறைமுக ஆணையத் தலைவர் முன்னிலையில், நிர்வாக பொறியாளர், யுனிவர்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பொது நிர்வாகி பினு மோகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் கையொப்பமிட்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 26, 1770 - 04:30:00 PM | Posted IP 104.2*****

வட நாட்டவன் எல்லாம் தமிழகத்தில் புகுந்து விட்டான் , தொழில் தொடங்க ஆரம்பித்துவிட்டான் , கடைசியில் மூட்டை முடிச்சு ஓடிடுவான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory