» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் அதிமுகவினர் நோட்டீஸ் விநியோகம்

சனி 31, ஜனவரி 2026 8:35:04 PM (IST)



தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியினர் வீடு, கடைகளில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையாக முதற்கட்டம் ஐந்து திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதோடு அறிவித்த திட்டங்களின் தொகுப்பை பொதுமக்களிடையே தெரியப்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் விநியோகிக்க உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன்  தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை வீடு வீடாகவும் கடை கடையாகவும் வழங்கினர். 

இதுபோல் விளாத்திகுளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.



இந்நிகழ்வில் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் மகேஷ்,விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் குட்லக் செல்வராஜ், வரதராஜ பெருமாள், மகளிர் அணி சாந்தி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பிரியா, பாஜக நிர்வாகி கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory