» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: மேலும் ஒருவர் காயம்!

சனி 31, ஜனவரி 2026 11:34:34 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் மகன் ஜெனித் (32), இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மேலமடம் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெனித் மற்றும் தனபால் ஆகிய இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனித் பரிதாபமாக இறந்தார். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory