» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா

சனி 31, ஜனவரி 2026 11:25:18 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. 

தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா  நாளை நடைபெறுகிறது. 

இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சோமாஸ்கந்தர் சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலுக்கு எழுந்தருளல், 9.00 மணிக்கு கும்ப பூஜை, 10.00 மணிக்கு அபிஷேகம், 11.00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

நண்பகல் 12.00 மணிக்கு தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு சுவாமி, அம்பாள், சுந்தரபாண்டிய விநாயகர் திருக்கோவிலில் சோடச தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் தெப்பகுளத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory