» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் வளாகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை: அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சனி 31, ஜனவரி 2026 8:22:44 AM (IST)



கழுகுமலை கோவில் வளாகத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஊழியர், நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை  எடுக்க கோரி அரசியல் கட்சியினர், முருக பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காந்தி மைதானத்தில் அரசியல் கட்சியினர், முருகபக்தர்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய பா.ஜனதா பார்வையாளர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க நகர செயலாளர் முத்துராஜ், பா.ஜனதா மேற்கு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, இந்து முன்னணி முன்னாள் தலைவர் இசக்கியப்பன், மத்திய அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கழுகாசலமூர்த்தி கோவில் அலுவலக அறையில் கடந்த 12-ந் தேதி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கோவில் ஊழியர் மீதும், நிர்வாக அதிகாரி மீதும் போலீசார் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பிராமணர் சங்க செயலாளர் செல்வமுத்துக்குமார், பா.ம.க. மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, கழுகுமலை நகர காங்கிரஸ் தலைவர் மரியதங்கராஜ், துணை தலைவர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு நகர உதவி செயலாளர் கருப்பசாமி, புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் நாகராஜ், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், நகர இந்து முன்னணி பிரகாஷ், பூமாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, த.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன், முதலியார் சமுதாயம் சார்பில் சண்முகம் மற்றும் முருக பக்தர்கள், பொதுமக்கள் திரளான கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory