» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:23:22 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் 117 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரின் உலகம் உன் கையில்  திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 117 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர்  கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். 

நாடார் உறவின் முறை சங்கப்பொருளாளர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு 117 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணிணியினை வழங்கினார்.  இதில்  கல்லூரி துறை தலைவர்கள் விஜயகோபாலன், செல்வ லட்சுமி, கற்குவேல் ராஜன், செல்வம், ரமேஷ், பிரியங்கா, ஆனந்த் குமார், செல்லத்துரை உட்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory