» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நல்லாயன் பள்ளியில் கலை கலாச்சார முகாம்: கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

வெள்ளி 30, ஜனவரி 2026 8:21:10 PM (IST)



தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறையுடடையோர் மேல்நிலைப் பள்ளியில் கலை கலாச்சார முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு பள்ளி தாளாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஜேசிஐபி யர்ல்சிட்டி குயீன் பீஸ் மெய்கண்டன், மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர், லயன்ஸ் கிளப் அட்சயா பியர்ல் சிட்டி, மதர் பைவ் ரோசஸ், மற்றும் வ உ சி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர் 

இதில், இப்பள்ளியில் பயிலும் 65 மாணவ மாணவியர்க்கு கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழுவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் வெற்றி கோப்பை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

டேவிட்Feb 1, 2026 - 09:06:02 PM | Posted IP 104.2*****

காக்ளீயர் இம்பிளான்ட் செய்யப்பட்ட பலருக்கு பேச்சு திறன் இல்லாமல் இருக்கிறார்களே

டேவிட்Feb 1, 2026 - 09:03:19 PM | Posted IP 172.7*****

காக்ளீயர் இம்பிளான்ட் செய்யப்பட்ட பலருக்கு பேச்சு திறன் இல்லாமல் இருக்கிறார்களே.அவர்களுக்கான பதில் என்ன

டேவிட்Feb 1, 2026 - 01:27:48 PM | Posted IP 162.1*****

காக்ளீயர் இம்பிளான்ட் செய்யப்பட்ட பலருக்கு பேச்சு திறன் இல்லாமல் இருக்கிறார்களே! என்ன செய்வது?

BalaJan 31, 2026 - 07:22:47 AM | Posted IP 172.7*****

காதுகேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ளான்ட் கருவி பொருத்தினாள் இந்த அழகு செல்வங்கள் மற்றவர்களை போல் பேச முடியும் என்பதை பள்ளி நிர்வாகம் சுயநலத்திற்காக மறைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது கலெக்டர் இது குறித்து விசாரித்து ஒவ்வொரு காது கேளாதோர் பள்ளியில் போர்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுகிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory