» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 30, ஜனவரி 2026 11:56:03 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் தொழுநோய் ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

சமூக சமத்துவத்தையும் மனித கண்ணியத்தையும் வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் நாள் தியாகிகள் தினத்தன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

மேலும், காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமான இன்று  தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கோட்டு ராஜா, நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா, முருகேசன், ஜான், சரவணகுமார், முத்துவேல், வைதேகி, சரண்யா, ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory