» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது அரசு பஸ் மோதல்: காய்கறி வியாபாரி பலி

வெள்ளி 30, ஜனவரி 2026 8:23:10 AM (IST)

தூதுகுழியில் மோட்டார் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். .

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சியை சேர்ந்த ராஜ் மகன் கணேசன் (42). காய்கறி வியாபாரி. இவர் நேற்று மதியம் நெல்லை மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டு பொன்னன்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழியில் நெல்லை-திருச்செந்தூர் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கணேசனுக்கு சொர்ணம் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory