» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பகுதியில் நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள்!

வெள்ளி 30, ஜனவரி 2026 7:43:22 AM (IST)


கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிவகாசிக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 புள்ளிகள் பதிவாகி உள்ளது வீடுகள், கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். 

சிப்பிப்பாறை கிராமத்தில் வீட்டின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது. நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இது ஒரு லேசான நில அதிர்வு என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாலாட்டின்புதூர்.. பாண்டவர்மங்கலம், சுபா நகர் பகுதியில்  சில வினாடிகள் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

சிப்பிப்பாறை கிராமத்தில் அதிக அளவில் காணப்பட்டதால் மக்கள் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினர்.சில நொடிகளுக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பதறியடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory