» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள் : தொல்.திருமாவளவன்
சனி 13, டிசம்பர் 2025 8:50:49 AM (IST)

எந்த அரசியல் பணியோ, அடிப்படை பணியோ தெரியாமல், இன்று சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் 12-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளையும் இடதுசாரிமயமாக்க வேண்டும். அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகவை புறக்கணித்துவிடக் கூடாது. அந்தக் கட்சியும் இடசாரி அரசியலை அடிப்படையாக கொண்டு பெரியார் கொள்கையுடன் உருவான இயக்கமாகதான் நாம் அணுக வேண்டும். இன்று சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எந்த அரசியல் பணியோ, அடிப்படை பணியோ தெரியவில்லை. ஆளும் திமுக அரசு மீதும், அக்கட்சி மீதும் எங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு. எனினும் கூட்டணியை, உறவை, நட்பை நாங்கள் போற்றுகிறோம். வலதுசாரிகளுக்கு துணைபோகிற கும்பலை ஆதரிக்க முடியாது. இடதுசாரிகள் அனைவரும் இணைந்து நிற்போம் என்றார்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் திபங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செயலர் திருச்சி செழியன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், சோ.பாலசுப்பிரமணியன், அ.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 18ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:27:50 PM (IST)

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)










