» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் வெள்ளம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:33:54 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியறுவதால் சாலையில் ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லா புரம் பகுதியில் இன்று அதிகாலையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் மழை வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர.
உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் பைப் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டபோது "மாநகராட்சி தரப்பில் யாரும் சாலையை தோண்டி பைப் லைன் வேலை செய்யவில்லை. யாரும் மர்ம நபர்கள் திருட்டு லைன் கொடுப்பதற்காக தோண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)










