» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாவட்ட மூத்தோர் தடகள போட்டி: பழையகாயல் ஆசிரியர் மாநில போட்டிக்கு தகுதி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:10:13 AM (IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட மூத்தோர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்து பழையகாயல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாநில தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் சார்பில் மூத்தோருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முன்னாள் தடகள வீரர்கள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், காவல்து றையினர் உடற்கல்வி துறையினர் மற்றும் பொதுநிலையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர். அதில் பழையகாயல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் எஸ். வின்ஸ்டன் 40 - 45 வயது பிரிவில் 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து மாநில தடகள போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடியில் நடைபெற இருக்கும் மாநில தடகளப் போட்டிக்கு ஆசிரியர் வின்ஸ்டன் தகுதி பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த உடற்கல்வி ஆசிரியரை பழையகாயல் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)










