» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகைகளை திருடிய இருவர் கைது: 18 பவுன் நகைகள் மீட்பு!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:23:25 AM (IST)

திருச்செந்தூர் அருகே பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசைவனத்துரை. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இவர், கடந்த 26ஆம் தேதி காலை திருச்சியில் உள்ள உறவினர் திருமணத்துக்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டாராம்.
அப்போது ஆடைகள், 18 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து வீட்டின் அருகில் உள்ள தரைப் பாலத்தில் வைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மற்றொரு பையை எடுத்துக் கொண்டு மனைவியுடன் திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் வைத்திருந்த பை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் ஆய்வாளர் இன்னோஸ்குமார் மற்றும் காவலர்கள்அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், கருப்பு நிற பைக்கில் வந்த இரு நபர்கள் பையை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், திருச்செந்தூர் அருகே உள்ள கூரந்தான்விளையைச் சேர்ந்த முத்து மகன் வைகுண்டம் என்ற வாசகன் (29). அவரது நண்பரான திருச்செந்தூர், அடைக்கலாபுரம் அருகே உள்ள பிலோமி நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஜயகுமார்(27) ஆகிய இருவரும் பையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருச்செந்தூர் வட்ட போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)










