» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சி.வ., அரசு பள்ளியில் மழைநீரை அகற்றி கழிவறையை மேம்படுத்த கோரிக்கை!
திங்கள் 1, டிசம்பர் 2025 3:42:06 PM (IST)

தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதியை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட செயலாளர் ராம் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் மழையின் காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் கழிவறைக்குள்ளே மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மாணவ,மாணவியர்கள் அதை பயன்படுத்த இயலவில்லை. இதனால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் வரும்.
கூடிய விரைவில் பொதுத்தேர்வு வரவிருக்கும் நேரத்தில் இது போன்ற உடல் பிரச்சினைகள் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தற்போதைக்கு கழிப்பறை வசதியை செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் வற்றிய பின் மழைநீர் செல்லாதவாறு புதிதாக கழிவறையை உயர்த்தி கட்டிட வேண்டும். பள்ளி வளாகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை துரிதமாக அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)










