» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல்: 3 தொழிலதிபர்கள் கைது!

திங்கள் 1, டிசம்பர் 2025 3:30:30 PM (IST)

சீனாவிலிருந்து குடைகள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட  ரூ.10.5 கோடி மதிப்பிலான  இ-சிகரெட்டுகள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவது இ.சிகரெட் ஆகும். ஒரு இ.சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதை விட இ.சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதை விட இ.சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

2019ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இ.சிகரெட்டை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு குடைகள் வந்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தியாவில் குடைகள் உற்பத்தி சீரான விலையில் இருக்கும் போது, சீனாவில் இருந்து குடைகளை இந்த நிறுவனம் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகம் மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ஏற்பட்டது. 

இதையடுத்து குறிப்பிட்ட அந்த 20 அடி கன்டெய்னர் பெட்டிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, குடைகளுக்கு பதிலாக மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட இ- சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் (56) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும் தொழிலதிபர்கள் ஆவர். இந்த கடத்தல் தொடர்பாக, முக்கிய நபர் ஒருவரை தேடி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory