» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடைகளால் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இடமாற்றம் செய்ய கோரிக்கை!

திங்கள் 1, டிசம்பர் 2025 3:10:28 PM (IST)

தூத்துக்குடியில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இரண்டு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆர்.காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்கெட் ரோடு மற்றும் சிதம்பரநகர் மையவாடி பஸ் ஸ்டாப் அருகில் தமிழக அரசாங்கம் நடத்தும் மனுபான கடை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 

அந்த இரண்டு டாப்மாக் கடையால் பெண்களுக்கு உண்மையாக பாதுகாப்பு இல்லை, முதலில் மையவாடி டாஸ்மாக் கடையால் பல கொலைகள், வழிபறிகள், பல மனிதர்கள் சண்டை இன்னும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இரண்டாவது, பூ மார்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பூ வாங்க வரும் பெண்கள், காய்கறி வாங்க வரும் பெண்கள், டாஸ்மாக் கடையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதைப் பற்றி பல முறை தங்களிடம் புகார் கூறினேன். 

காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட்டமும் நடத்தினோம். இதுநாள் வரை எந்த பலனும் இல்லை. ஆனால் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பொய்யான தகவலை முன்வைத்து புகார் மனுவை நிராகரித்து விடுகிறார்கள். வரும்முன் காப்போம் என்ற பழமொழிப்படி, சில நாட்கள் முன்பு கயாத்தார் மதுபான கடையில் ஏற்பட்ட விபரீதம் எங்கும் நடந்து விட கூடாது என்பதற்காக, மேற்கூறிய இரண்டு மதுபான கடையையும் தாங்கள் நேரடி ஆய்வு செய்து, உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்மென்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

அதுDec 2, 2025 - 12:57:05 PM | Posted IP 104.2*****

திராவிட ஆட்சி அப்படிதாம்பா, கட்டுமரம் குடும்பம் நடத்தும் சாராய ஆலைக்கு துட்டு வேணும் ல. அது தான் திராவிட அரசு டாஸ்மாக்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory