» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 1, டிசம்பர் 2025 11:32:13 AM (IST)



தூத்துக்குடியில் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அன்னாள் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாலை அமைத்து தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், தனியார் பகுதியில் சாலை போடுவது கடினம். அதை பொதுப் பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் சாலை அமைத்து தருவதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் சாலை அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை திரட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எட்டயபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த மேயர் ஜெகன் பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தியதோடு பள்ளிக்குச் செல்லும் சாலையை பொது பாதையாக மாநகராட்சிக்கு எழுதிக் கொடுத்தால் உடனடியாக சாலை அமைத்து தருவதாக கூறினார்.  இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து

முட்டாள்Dec 2, 2025 - 01:00:35 PM | Posted IP 104.2*****

பள்ளி பேர் ஒழுங்கா போடுங்க .

RajaDec 1, 2025 - 10:35:54 PM | Posted IP 104.2*****

Thanks for NamTamizhar party

RajaDec 1, 2025 - 10:35:31 PM | Posted IP 104.2*****

Thanks for Nam Tamizhar

தமிழ்ச்செல்வன்Dec 1, 2025 - 07:14:09 PM | Posted IP 172.7*****

மாநகராட்சி சாலை அமைத்து தரவேண்டும் என்றால் அந்த சாலையை மாநகராட்சிக்கு எழுதிக்கொடுங்கள்... மேயரின் கோரிக்கை சரிதானே....

சாமானியன்Dec 1, 2025 - 12:30:01 PM | Posted IP 172.7*****

மக்கள் நலன் சார்ந்த பொது பிரச்சனைகளில் களமிறங்கி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியினரின் செயல் பாராட்டிற்குரியது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory