» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குளம் போல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் : பொதுமக்கள் அவதி!

ஞாயிறு 30, நவம்பர் 2025 8:41:52 PM (IST)



தூத்துக்குடியில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகில் சுந்தரவேல் புரம் மேற்கு பகுதியில் 40 அடி ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. 

தேங்கிக்கிடக்கும் நீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டாலும் தொடர்ந்து மழைநீர் குறைந்ததாகவே தெரியவில்லை அங்கு தேங்கியுள்ள மழை நீர் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் பல்வேறு விதமான நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு தேங்கியுள்ள மழை நீரை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும், வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஒவ்வொரு முறையும் மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பெயரளவுக்குத்தான் மோட்டாராக உள்ளது. மின்மோட்டார் இயக்குவது கிடையாது அதனால் மழை நீர் வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அங்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு மின்மோட்டரையும் உடனடியாக முழுவதும் இயக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


மக்கள் கருத்து

kumarDec 1, 2025 - 11:50:19 AM | Posted IP 172.7*****

mappilaiurani merkku kamaraj nagar la kulam pol than iruku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory