» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:14:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதிகளின் நிலை என்ன என்பதை கண்காணிக்கப்பட்டு 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கையுறை பாதுகாப்பு உடைகள் உபகரணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)










