» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை சரகத்தில் பதவி உயர்வு பெற்ற 27 பேர் இன்ஸ்பெக்டர்களாக நியமனம்: டி.ஐ.ஜி. உத்தரவு

ஞாயிறு 30, நவம்பர் 2025 9:46:46 AM (IST)

நெல்லை சரகத்தில் பதவி உயர்வு பெற்ற 27 பேர் இன்ஸ்பெக்டர்களாக காவல் நிலையங்களில் பணி நியமனம் செய்து டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய பலருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் பதவி உயர்வு பெற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்த இன்ஸ்பெக்டர்களுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணி நியமனம் வழங்கி நேற்று உத்தரவிட்டப்பட்டது.

அதன்படி சாலமோன் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கும், அருள் சாம்ராஜ் சேர்ந்தமரத்திற்கும், பாரதிராஜா பனவடலிசத்திரத்திற்கும், அய்யனார் புளியரைக்கும், ஸ்டீபன் வினோத் பாவூர்சத்திரத்திற்கும், இசக்கிராஜ் தென்காசி ஐ.யூ.சி.ஏ.டயிள்யூவுக்கும் நியமனம் செய்யப்பட்டனர்.

பாரதலிங்கம் பாப்பாக்குடிக்கும், கண்ணாகாந்தி திருக்குறுங்குடிக்கும், செண்பகவல்லி முக்கூடலுக்கும், சுபாஷ் சீவலப்பேரிக்கும், சங்கரநாராயணன் நாங்குநேரிக்கும், ஹென்றி அமலதாஸ் சிவந்திபட்டிக்கும், நவீஸ்அந்தோணி ரோஸி மணிமுத்தாறுக்கும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி

மணிகண்டன் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூருக்கும், தனசேகரன் சிப்காட்டிற்கும், எம்.வேலம்மாள் தட்டார்மடத்திற்கும், கார்த்திக் ஓட்டப்பிடாரத்திற்கும், ஆனந்தகுமார் கயத்தாருக்கும், மாடசாமி புதுக்கோட்டைக்கும் நியமிக்கப்பட்டனர்.

மாடசாமி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடைக்கும், ஜி.வேலம்மாள் வடசேரிக்கும், ரவிக்குமார் கோட்டாறுக்கும், கருப்பசாமி தக்கலைக்கும், தமிழரசன் மார்த்தாண்டத்திற்கும், மாதன் ராம்குமார் திருவட்டாருக்கும், சுந்தர்ராஜபெருமாள் கன்னியாகுமரிக்கும், வீராசாமி அறுமனைக்கும், முத்துசெல்வம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இடமாற்றம்

இதேபோல் 23 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருவட்டாறு இன்ஸ்பெக்டர் காந்திமதி குலசேகரத்திற்கும், கோட்டாறு அருள் பிரகாஷ் தெற்கு தாமரைகுளத்திற்கும், அருமனை சாந்தி நேசமணிநகருக்கும், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஜோதிலட்சுமி நெல்லை மாவட்டம் பத்தமடைக்கும், ராஜாக்கள்மங்கலம் ராமர் நெல்லை மாவட்ட என்.எஸ்.டி.பிரிவுக்கும், குலசேகரம் கனகராஜ் கொல்லங்கோட்டுக்கும், தக்கலை உமா குட்டிகடைக்கும், வாசுதேவநல்லூர் கண்மணி ஆய்குடிக்கும், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் கமலாதேவி குருவிகுளத்திற்கும், தென்காசி மாவட்ட ஐ.யூ.சி.ஏ.டபிள்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வள்ளியூர்

மேலும் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலிசத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும், கூடங்குளம் ரகுராஜன் மேலசெவலுக்கும், நாங்குநேரி சுரேஷ்குமார் வள்ளியூருக்கும், வள்ளியூர் நவீன் கூடங்குளத்திற்கும், நாங்குநேரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், 

சிவந்திபட்டி சுதா நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், சிப்காட் சைஸ் தருவைகுளத்திற்கும், கயத்தாறு சுகாதேவி நாலாட்டின்புத்தூருக்கும், தட்டார்மடம் ஸ்டெல்லா பாய் தட்டப்பாறைக்கும், ஓட்டப்பிடாரம் பவல்ஏசுதாசன் புளியம்பட்டிக்கும், புளியம்பட்டி மணியன் சங்கரலிங்கபுரத்திற்கும் இடமாற்றம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory