» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஜக நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும்: சித்ராங்கதன்
திங்கள் 14, ஜூலை 2025 5:03:51 PM (IST)

ஏரல் அருகே பாஜக நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நடுவக்குறிச்சி கிராமத்தில் தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்டத் துணைத் தலைவராக உள்ள பாலமுருகன், தனது அடியாட்களுடன் சென்று ஏரல் ஒன்றிய பாஜக நிர்வாகி ராஜதுரை வீடுபுகுந்து, அவரையும் அவரது மனைவி மற்றும் மனைவியின் இரு சகோதரர்களையும் அரிவாளால் வெட்டியும் உருட்டு கட்டைகளால் அடித்தும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான ராஜதுரை சாயர்புரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது, புகாரை பெற்றுக் கொள்ளாமல் எதற்காக இங்கு வந்தீர்கள்? காவல் நிலையத்தை விட்டு முதலில் வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாயிலாக தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை சம்பவம் நடைபெற்று இருதினங்கள் ஆகியும் இதுவரையில் காவல்துறை கைது செய்யாதது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவர்கள் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. காவல்துறை, உடனடியாக பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் நாளைய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக நிரவாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)










