» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறார்கள் ஓட்டி வந்த 19 பைக்குகள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!

சனி 29, மார்ச் 2025 12:33:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில்  சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில்  உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில்,  நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். 

அப்போது, வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக  "JUVENILE DRIVING CASE" under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் கோப்புக்கு எடுக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ 25000 அபராதம், மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை, ஒரு வருடம் வாகன பதிவு ரத்து, சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை போன்ற தண்டைனைகள் விதிக்கப்படும். ஆகவே, பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில்,  சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள்  கவனமாக செயல்படுமாறு நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory