» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை : சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்!

சனி 29, மார்ச் 2025 8:45:47 AM (IST)



கோவில்பட்டியில் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, சாலையில் பாலை கொட்டி நேற்று உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பசும்பால் கொள்முதல் விலை ரூ.35-லிருந்து ரூ.50 ஆகவும், எருமைப்பால் விலை ரூ.44-லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மாடுகளுக்கான காப்பீடு திட்டத்தை இந்தாண்டு செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆவினுக்கு வந்து, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் நியமிக்க வேண்டும். 

ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை காலதாமதமின்றி சங்கங்களுக்கு வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் தரத்தையும், அளவையும் கணக்கிட வேண்டும். வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் பாலையும், பால் சார்ந்த பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை தீவன விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்க வேண்டும். உறுப்பினர்களுக்கு தாது உப்பு இலவசமாக வழங்க வேண்டும். சங்கப் பணியாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும். தினக்கூலி அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், அங்கு கேனில் இருந்த பாலை சாலையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இ்ந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் நியூட்டன், மாநிலச் செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் ராமசுப்பு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் லிங்கையா மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

கந்தசாமிMar 29, 2025 - 11:28:39 AM | Posted IP 172.7*****

பாலை தரையில் கொட்டுபவன் உண்மையான விவசாயியாக இருக்க மாட்டான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory