» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில்முனைவோருக்கு ஆட்சியர் அழைப்பு!
புதன் 26, மார்ச் 2025 3:46:14 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட விண்ணப்பிக்கலாம் என தொழில்முனைவோருக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கோழிபண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின் வழி மாநிலத்தின் இறைச்சி, மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்ப பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும் , பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு (TMR), தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கபடுகிறது.
இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள்ஆவர்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர்கள் https://nlm.udyamimitra.in/என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnlda.tn.gov.in/என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்டகால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனஅலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
Muthu raj pMar 28, 2025 - 07:38:27 PM | Posted IP 172.7*****
ஆடு வளர்ப்பு
PandiyarajanMar 28, 2025 - 08:26:50 AM | Posted IP 162.1*****
கிராம மக்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்கள்
MadasamyMar 27, 2025 - 06:43:14 PM | Posted IP 162.1*****
வெள்ளாடு பாண்ணை
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களை 100 சதவீதம் உயர்கல்வியில் இணைக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:20:11 PM (IST)

ஏப்.4ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:55:09 PM (IST)

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:33:15 PM (IST)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:21:59 PM (IST)

கணநாதன்Mar 28, 2025 - 09:29:43 PM | Posted IP 162.1*****