» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடல் அரிப்பிலிருந்து திருச்செந்தூர் கோவிலை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி கூட்டு பிரார்த்தனை!
சனி 18, ஜனவரி 2025 11:25:34 AM (IST)
கடல் அரிப்பிலிருந்து திருச்செந்தூர் கோவிலை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடற்கரையில் சுமார் 7 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை காத்திட வலியுறுத்தி நெல்லை கோட்ட இந்து முன்னணியின் சார்பில் நேற்று மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள தூண்டுகை விநாயகர் கோவில் அருகே விநாயகர் அகவல் பாராயணம் மற்றும் சூடம் ஏற்றி விநாயகரிடம் வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்விற்கு மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் கா. குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.சக்திவேலன், உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்.